அதிமுக., தேர்தல் அலுவலகத்தில் திடீர் தீ... எடப்பாடி இருந்ததால் பரபரப்பு

 
Published : Dec 08, 2017, 09:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
அதிமுக., தேர்தல் அலுவலகத்தில் திடீர் தீ... எடப்பாடி இருந்ததால் பரபரப்பு

சுருக்கம்

fire accident at admk election booth in rk nagar

சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக., தேர்தல் அலுவலகம் அருகே திடீரென தீப் பற்றியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தீவிபத்து ஏற்பட்ட போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தேர்தல் பணிமனை அலுவலகத்தில் இருந்தார். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 

தேர்தல் அலுவலகத்தில் பற்றிய தீயை அணைக்க, அங்கிருந்தவர்கள் படாத பாடு பட்டனர். தீவிபத்துக்கான காரணம் என்ன என்று விசாரித்தபோது, அந்தப் பகுதியில்,  பூமியில் பதிக்கப்பட்டிருந்த மின்சார ஒயரில் மின் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப் பற்றியதாம். 

இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக பிரசாரத்தை தொடங்கி, தொடர்ந்து மேற்கொண்டனர்.  அதிமுக., சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக, இன்று இருவரும் பிரசாரம் செய்தனர். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!