கைரேகைச் சட்டத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு அரசியல் கட்சியினர் ஒன்றாக கூடி அஞ்சலி…

 
Published : Apr 04, 2017, 09:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
கைரேகைச் சட்டத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு அரசியல் கட்சியினர் ஒன்றாக கூடி அஞ்சலி…

சுருக்கம்

Fingerprint martyrs who gave their lives fighting against the law respects the political parties gathered together

ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த கைரேகைச் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர் நீத்த 16 தியாகிகளின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், மற்றும் அமைப்பினர்கள் ஒன்றாக கூடி அஞ்சலி செலுத்தினர்.

மதுரை, பேரையூர் தாலுகா சேடபட்டி அருகே பெருங்காமநல்லுார் உள்ளது. இந்த ஊரில் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த கைரேகைச் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர் நீத்த 16 தியாகிகளின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், மற்றும் அமைப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் துரை தனராஜன், சேடபட்டி ஒன்றியசெயலாளர் பிச்சைராஜன் உள்பட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் இளமகிழன், செயற்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபு, உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமையில் மாவட்ட செயலாளர் தங்கமணி, உசிலம்பட்டி நகர் சசிவர்ணத்தேவன், வட்டார தலைவர் வெஸ்டன் முருகன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தெற்கு மாவட்டத் தலைவர் கே.கே.குருசாமி, மாநில இளைஞரணி செயலாளர் காமாட்சி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

பாரதீய ஜனதா கட்சி சார்பில் சுசீந்திரன் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையிலும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் பி.வி.கதிரவன் தலைமையிலும், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் நிறுவனத்தலைவர் கே.ஏ.முருகன்ஜி தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ் .. ஸ்டாலின் .. விஜய் ... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!