பைனான்சியர் போத்ரா மகன்கள் மீதான ஜாமின் மனு - விசாரணை ஒத்திவைப்பு...

First Published Aug 7, 2017, 7:50 PM IST
Highlights
financier botra son bail case postpone


கந்து வட்டி புகாரில் கைதான பைனான்சியர் போத்ரா மகன்கள் மீதான ஜாமீன் மனு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

பிரபல சினிமா பைனான்சியர் எஸ்.முகுந்சந்த் போத்ரா. இவர், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கஸ்தூரி ராஜா மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சதீஷ்குமார், பைனான்சியர் போத்ராவிடம் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை போத்ராவிடம் திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து போத்ரா மற்றும் அவரது மகன்கள் இரண்டுபேரும் கந்து வட்டி பணம் கேட்டு மிரட்டி வருவதாக சதீஷ்குமார் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதைதொடர்ந்து, ஓட்டல் உரிமையாளர் செந்தில் கணபதி என்பவர், போத்ராவின் மகன்கள் மீது புகார் அளித்தார்.

அந்த புகாரில் தான் ரூ.1.40 கோடி, போத்ராவிடம் வாங்கியதாகவும், இதுவரை 2 கோடி ரூபாய் வரை செலுத்தி உள்ளதாகவும் கூறியிருந்தார். இதனால் அவர்கள் மீது 2 வது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகினர்.

இதைதொடர்ந்து நகை வியாபாரி ஹானந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீது 3 வது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

இதனால் இந்த மூன்றாவது புகாரில் போத்ரா மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து போத்ராவின் மகன்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

click me!