காமராஜரில் தொடங்கி பெரியாரிடம் முடிந்த பிடல் காஸ்ட்ரோ…

Asianet News Tamil  
Published : Nov 28, 2016, 08:58 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
காமராஜரில் தொடங்கி பெரியாரிடம் முடிந்த பிடல் காஸ்ட்ரோ…

சுருக்கம்

பிடல் காஸ்ட்ரோவின் மறைவையொட்டி, மணப்பாறையில் காமராஜர் சிலை தொடங்கி, தந்தை பெரியார் சிலை வரை பிடல் காஸ்ட்ரோவுக்கு அமைதி ஊர்வலம் நடைப்பெற்றது.

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மணப்பாறையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் அமைதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தந்தை பெரியார் சிலையை அடைந்தது. அங்கு பிடல் காஸ்ட்ரோவிற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் பலரும் பேசினர்.

இந்த அமைதி ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., காங்கிரஸ், தி.மு.க, தே.மு.தி.க., திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மா.கா மற்றும் மணவைத் தமிழ்மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

PREV
click me!

Recommended Stories

Udhayanidhi vs CM Vijay: சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!
முதல்வர் விஜய்யின் ‘கோட் சூட்’ ரகசியம்... அதன் பின்னணியில் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா...!