நடைபயிற்சியில் ஈடுபடும் முதலமைச்சர் ஜெ. – அப்பல்லோ டாக்டர்கள் தகவல்

Asianet News Tamil  
Published : Nov 28, 2016, 08:50 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
நடைபயிற்சியில் ஈடுபடும் முதலமைச்சர் ஜெ. – அப்பல்லோ டாக்டர்கள் தகவல்

சுருக்கம்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போது நடப்பதற்கான பயிற்சி மேற்கொள்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலோ, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோ தெரபி சிகிச்சை பெண் நிபுணர்கள் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒவ்வொரு உறுப்புகளுக்கும் வெவ்வேறு வகையில் பிசியோதெரபி உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி அவருக்கு நடைபயிற்சி அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை முன்பு சிறப்பு பூஜை தினமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அதிமுக மகளிரணி சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும், அன்னதானம் வழங்கப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனை நுழைவாயில் அருகே உள்ள விநாயகர் கோவில் அருகே நேற்று இரவு அதிமுக தொண்டர்கள் 9 பூசணிக்காய், 9 தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

பிஞ்சு குழந்தைகளின் மரண ஓலம்.. இது தான் பாதுகாப்பான மாநிலமா..? முதல்வருக்கு தவெக கேள்வி
உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பிப்.8ல் பிரமாண்ட விழா நடத்தும் ஜாக்டோ ஜியோ