
9 மாதம் முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள், சிறுவர், சிறுமியருககு கடந்த 6ம் தேதியிலிருந்து தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு கோடியே 80 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை 77 லட்சம் பேருக்கு ஊசி போடப்பட்டுள்ளதாகவும் தமிழக பொதுசுகாதார இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்பசுகாதார நிலையங்களிலும் போடபட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு சுகாதார மையம் சார்பில் சேலம் தாரமங்கலம் அரசுப்பள்ளியில் கடந்த வாரம் தடுப்பூசி போடப்பட்டது.
தாராமங்கலத்தை சேர்ந்த பூமிகா என்ற மாணவி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்டதையடுத்து காய்ச்சல் காரணமாக கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று அவர், உயிரிழந்தார்.
தடுப்பூசி போட்டவுடன் மயக்கமோ, காய்ச்சலோ வந்தால் பயப்பட தேவையில்லை என பொதுமக்களுக்கு ஏற்கனவே சுகாதாரத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்னும் 15 நாட்களுக்கு தடுப்பூசி முகாம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக பொதுசுகாதார இயக்குனர் குழந்தைசாமி அறிவித்துள்ளார்.