
ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் நிறுத்தபட்டுள்ளது.
1 கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும், 1 கிலோ உளுத்தம் பருப்பு ரூ.30-க்கும் பாமாயில் 1 கிலோ ரூ.25-க்கும் ரேஷனில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது.
இதனால் ஏழை மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் மக்களிடம் எங்களுக்கு சப்ளை வரவில்லை என்ற பதிலை கூறுகின்றனர்.
அரிசி, சர்க்கரை விநியோகமும் முன்பை விட குறைந்த அளவிலேயே விநியோகம் செய்யபடுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசு கஜானா காலியாகிவிட்டதோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது