
தருமபுரி
அரூரில் நடைப்பெற்ற திருவிழாவுக்கு வைத்த பேனரில் பெண்களை கேலி செய்யும் விதமாக வாசகம் இடம்பெற்றிருந்ததால் விளம்பர பேனர் வைத்த ஒன்பது பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கீரைப்பட்டியில் கடந்த வாரம் கோயில் திருவிழா நடைப்பெற்றது.
அதற்கு இளைஞர்கள் சிலர் திருவிழா வரவேற்பு பேனர் வைத்துள்ளனர். அதில், பெண்களை கேலி செய்யும் வகையில் விளம்பர பேனரில் வாசகம் எழுதப்பட்டிருந்ததாம்.
இது குறித்து மக்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கீரைப்பட்டியைச் சேர்ந்த பீமன் மகன்கள் அறிவழகன் (22), தினேஷ் (20), சர்தார் மகன்கள் சையத் ஆசிக்சையத் (19), இஸ்மாயில் (21), பாஷா மகன் பரூக் (10), சேகர் மகன் ரஞ்சித் (19), புகழேந்தி மகன் பிரதீப் (20), சீனிவாசன் மகன் ஜெய் (18), குமார் மகன் பவித்ரன் (20) ஆகியோரை காவலாளர்கள் கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய மணி (எ) பல்சர் மணி, சென்னப்பன் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களையும் காவலாளர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.