பெண் புகைப்படக் கலைஞரா? ‘மழை’ படங்களை அனுப்புங்களேன்...

 
Published : Nov 27, 2017, 12:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
பெண் புகைப்படக் கலைஞரா? ‘மழை’ படங்களை அனுப்புங்களேன்...

சுருக்கம்

Female photographer Send rain pictures

சென்னை போட்டோ ‘பைநெல்’ அறக்கட்டளையுடன் இணைந்து, ‘தி பியர்லெஸ் உமன் போட்டோகிராபர்ஸ்’ சென்னை, ‘மழைகால’ புகைப்படங்களை அனுப்பக் கோரியுள்ளது.

மழைக்காலத்தில் தாங்கள் அனுபவித்த விஷங்கள், குடும்பத்தில் அனுபவித்த விஷயங்களை, நிகழ்ந்த சம்பவங்களை புகைப்பட வடிவில் எடுத்து அனுப்பி வைக்க வேண்டும். ஆண் ஆதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில் பெண் புகைப்படக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், ஷானன் ஜிர்கலே என்பவரால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் இந்த குழு தொடங்கப்பட்டது. மாதத்துக்கு ஒருமுறை சந்திக்கும் இந்த குழுவினர் புகைப்படங்கள் குறித்த ஆலோசனைகள், விவாதங்களை ஆக்கப்பூர்வமாக நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதேபோன்ற புகைப்பட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சியின் கருத்துரு ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்த இந்த முறை மழைகாலம் என்ற தலைப்பில் புகைப்படங்கள் எடுத்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து ஜிர்கலே கூறுகையில், “ எத்தனைபேர் இதில் பதிவு செய்து புகைப்படங்களை அனுப்புகிறார்களோ அதில் சிறந்த 10 புகைப்படங்களை தேர்வு செய்வோம்’’ எனத் தெரிவித்தார். இதில் தேர்வு செய்யப்படும் 10 புகைப்படங்கள் டிசம்பர் 3-ந்தேதி சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷன் ஸ்கூலில் நடக்கும் கருத்தரங்கில் வைத்து விவாதிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள விரும்பும் பெண் புகைப்படக் கலைஞர்கள் 10 புகைப்படங்களை ‘ஜிப்’ பைலாக மாற்றி, டிசம்பர் 1ந்தேதி 4 மணிக்குள் அனுப்ப வேண்டும். www.goo.gl/7zTZUT இந்த தளத்தில் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!