
வேலூர்
பணம் வாங்கிக் கொண்டு குற்றவாளியிட ஆவணங்களை ஒப்படைத்த பெண் காவல் உதவி ஆய்வாளரை பணிநீக்கம் செய்து டிஐஜி அதிரடி உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவர் கவிதா.
இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றினார்.
அப்போது வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு ஆவணங்களை குற்றவாளிக்கு கொடுத்ததாக இவர்மீது குற்றச்சாட்டப்பட்டது.
இதுகுறித்து அவர் மீது வழக்குப்பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், மூன்று வருடங்களாக விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கவிதாவை பணிநீக்கம் செய்து டிஐஜி ஆர்.தமிழ்சந்திரன் அதிரடியாக உத்தரவிட்டார்.