பள்ளி வாகனங்களை இயக்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது
பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் புதிய உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது. இதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பள்ளி வாகனங்களுக்கான 32 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு;
** பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.
** 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை பணியில் நியமிக்க வேண்டும்.
** பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
** சி.சி.டி.வி. கேமரா பொருத்தி, காட்சிகளை சேகரித்து காவல்துறையிடம் வழங்க வேண்டும்.
** ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் சரி பார்க்க வேண்டும்.
** வாகன ஓட்டுநர், உதவியாளர் மது அருந்தியுள்ளார்களா என்பதை தினமும் பரிசோதிக்க வேண்டும். இதற்காக, ஓட்டுநர்களுக்கு தினமும் சுவாச பரிசோதனை செய்த பிறகே வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும்.
மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி: முதல்வர் ஸ்டாலின் சாடல்!
** ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
** போக்சோ சட்ட விதிகள் பற்றி ஒட்டுநர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும்.
** பள்ளி வாகனங்களில் ஓட்டுநர், உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தனியார் பள்ளி வாகனங்கள் தொடர்பான தகவல்களை ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.