காதலை கைவிட மறுத்த மகளை சரமாரியாக வெட்டிய தந்தை... ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து அலறி துடித்த கோரம்!

 
Published : May 02, 2018, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
காதலை கைவிட மறுத்த மகளை சரமாரியாக வெட்டிய தந்தை... ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து அலறி துடித்த கோரம்!

சுருக்கம்

father killed daughter

காதலை கைவிட மறுத்த மகளை வீச்சரிவாளை எடுத்து கழுத்தில் சரமாரியாக வெட்டியதில்  ரத்த வெள்ளத்தில் அலறி  துடித்து வீழ்ந்த கொடுமையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராமநாராயணன். விவசாயி. இவரது மகள் பார்கவி. செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் பார்கவி பிளஸ் 1 படிக்கிறார். இவர், தனது உறவினர் மகன் ராஜ்குமார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம், பார்கவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, தற்போது படிப்பு முக்கியம். படித்து முடித்தவுடன், காதலிக்கும் உறவினர் மகனுக்கே திருமணம் செய்து வைப்பதாக, மகளுக்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், பார்கவி அதை கேட்காமல் தொடர்ந்து ராஜ்குமாரோடு பழகியுள்ளார்.

இதனையடுத்து, நேற்று அதிகாலை 4 மணியளவில், ராமநாராயணன் எழுந்து பார்த்த போது பார்கவியை  காணவில்லை. இதையடுத்து, அவரது காதலன் ராஜ்குமார் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு பார்கவி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் மகளிடம் சமரசம் பேசிய அவர், அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.

வீடு திரும்பியதும், தந்தைக்கும், மகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ராமநாராயணன் வீட்டில் இருந்த வீச்சரிவாளை எடுத்து மகளின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

இதில் ரத்த கொட்டியது பார்கவி அலறி துடித்தார். பார்கவியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ!
வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!