தொழில் போட்டியால் பால் வியாபாரியை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் உத்தரவு...

 
Published : Jan 11, 2018, 06:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
தொழில் போட்டியால் பால் வியாபாரியை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் உத்தரவு...

சுருக்கம்

Father and son killed for breaking his business with business competition - Court orders ...

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் தொழில் போட்டி காரணமாக பால் வியாபாரி கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து இராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இராமநாதபுரம் மாவட்டம், சுப்புத்தேவன் வலசை கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் ஆனந்தன் (35). இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ஆனந்தன் பசு மாடுகளை வைத்து கூட்டுறவு சங்கத்திற்கு பால் விநியோகம் செய்து வந்த நிலையில் இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த நாகராஜன் (59) மற்றும் அவருடைய மகன் கேசவன்(30) ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

நாகராஜனும், கேசவனும் பாலில் தண்ணீர் கலப்பதாக கூட்டுறவு சங்கத்தில் ஆனந்தன் அடிக்கடி புகார் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கேசவன் மற்றும் அவரது தந்தை நாகராஜன் மற்றும் நண்பர் தினேஷ்ராஜா ஆகியோர் சேர்ந்து கடந்த 3.6.2011 அன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற ஆனந்தனை விரட்டிச்சென்று ஊருணிக்காரன் வலசை அருகே வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

இதுகுறித்து இராமநாதபுரம் கேணிக்கரை காவல் ஆய்வாளர் பாண்டியன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரும் மதுரை மற்றும் இராமேசுவரம் நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த ஒரு வருடத்தில் 3–வது குற்றவாளியான இராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த தினேஷ்ராஜா (30) கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய நாகராஜன் தற்போது ஆர்.எஸ்.மடை கிராம தலையாரியாக பணியாற்றி வருகிறார். இந்த வழக்கு இராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேசுவரன் குற்றம்சாட்டப்பட்ட கேசவன் மற்றும் அவருடைய தந்தை நாகராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவுப் பிறப்பித்தார். மேலும், கேசவனுக்கு ரூ.20 ஆயிரம், நாகராஜனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர்கள் வெங்கடேசன், ஜெய்சங்கர் ஆகியோர் வாதாடினர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!