
வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சிறப்பு நிகழ்வாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் விடுமறை என்பதால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 12ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கலாச்சாரம், பாரம்பரியத்தை பேணிக்காக்கும் பொருட்டும், பொங்கல் பண்டிகையை மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குதூகலமாக கொண்டாடும் வகையில் வரும் 12 ஆம் தேதி, அதாவது வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பஸ்கள் முழு அளவில் இயங்கவில்லை. இந்த போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மேலும் பள்ளி செல்லும் மாணவர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். போராட்டம் முடிவுக்கு வராத நிலையில் சிறப்பு நிகழ்வாக அனைத்து பள்ளிகளுக்கும் 12-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.