
திருவாரூர்
துப்பாக்கிச்சூடு நடத்தி விவசாயிகளை சுட்டுக் கொன்ற மத்தியப் பிரதேச காவல் துறையைக் கண்டித்து திருவாரூரில் இன்று அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் போராட்டம் நடக்கிறது.
அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், “வேளாண் விளை பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,
பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மத்தியப் பிரதேச காவல்துறை துப்பாக்கிச் சூட்டை நடத்தி 9 பேரைக் கொன்றது.
இதேபோல், மகாராஷ்டிராவிலும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்த நிலையில் அம்மாநில அரசு பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது.
ஆனால், விவசாயிகளை பலியிட்ட, மத்தியப் பிரதேச அரசின் முதல்வர் விவசாயிகளின் போராட்டத்தைத் திசை திருப்பும் வகையில் உண்ணாவிரதம் நடத்தி விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். விவசாயிகளின் கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை.
எனவே, மத்தியப் பிரதேச காவல் துறையைக் கண்டித்து, அந்த மாநில விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவாரூரில் இன்று அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்று அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.