பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்…

 
Published : Oct 10, 2017, 07:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்…

சுருக்கம்

Farmers stray road fighters asking crop insurance compensation payments ...

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம்,  மணமேல்குடி வட்டாரத்தில் கடந்தாண்டு பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மணமேல்குடி பேருந்து நிலையம் அருகே விவசாயிகள்  நேற்றூ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராத்திற்கு தேமுதிக ஒன்றியச் செயலாளர்  எஸ்.கார்த்திகேயன் தலைமைத் தாங்கினார். இதில், சுற்றுவட்டாரத்தில் உள்ள 26-க்கும் மேற்பட்ட  ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

வட்டாட்சியர் சாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள்,  போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அக்டோபர் 11-ஆம் தேதி சமாதானக் கூட்டத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று உறுதியளித்தனர்.

அந்த உறுதியை ஏற்று விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!