
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மானிய விலையில் உரம்,விதைகள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 21 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகளும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கங்கள், அழைப்பு விடுத்திருந்தன
இதனையடுத்து இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று அமைதியான முறையில் சாலை மறியல்,ரயில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்,.
இதனிடையே இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு திமுக, காங்கிரஸ், ஓபிஎஸ் அணிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.