"விவசாயிகள் நிர்வாண போராட்டம்" - பிரதமர் அலுவலகம் முன்பு பரபரப்பு

 
Published : Apr 10, 2017, 12:41 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
"விவசாயிகள் நிர்வாண போராட்டம்" - பிரதமர் அலுவலகம் முன்பு பரபரப்பு

சுருக்கம்

farmers nude protest infront of PM office

பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் கடந்த 28 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் எலிகை வாயில் கவ்வி பிடித்தும், அரை நிர்வாணமாகவும், மீசை மற்றும் தலைமுடியை பாதி மழித்தும் போராட்டம் நடத்தினர். நேற்று மொட்டையடித்து போராட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் இந்த அறப்போராட்டத்துக்கு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர். தமிழக அரசியல் கட்சியினரும், விவசாயிகக்கு ஆதரவு தெரிவித்து, விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமரிடம் பேசுவதாக உறுதியளித்தனர்.

இந்நிலையில், தற்போது சில நிமிடங்களுக்கு முன், அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள், பிரதமர் அலுவலகம் அருகே சென்றனர். அப்போது திடீரென அவர்கள், ஆடைகளை களைந்துவிட்டு, நிர்வாணமாக ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை மடப்க்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். ஆனாலும், போரட்டக்காரர்கள், வேனில் இருந்து குதித்து சாலையில் நிர்வாணமாக ஓடினர்.

இதுகுறித்து அய்யாகண்ணு கூறியதாவது, எங்களிடம் பேசிய மத்திய அமைச்சர்கள், பிரதமரிடம் எங்களை பற்றி பேசுவதாக கூறினார்கள். பிரதமருடன் சந்திக்க அனுமதி பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், அதை செய்யாமல் ஏமாற்றிவிட்டனர். இதனால், நாங்கள் நிர்வாண போராட்டம் நடத்துகிறோம் என்றார்.

PREV
click me!

Recommended Stories

ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!
சீமானின் பேச்சை ரசித்து கேட்ட தொண்டரை கழுத்தை பிடித்து தள்ளிய நிர்வாகிகள்.. நாதக நிகழ்ச்சியில் பரபரப்பு..