
நெல்லை
தாமிரபரணி நதியை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே நிலவும் கடுமையான வற்ட்சியால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் கோடை பிறக்காத நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எந்த நடவடிக்கையும் பெரிதாக எடுக்கப்படவும் இல்லை.
இந்த நிலையில், தாமிரபரணீ ஆற்றை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் செயலாக மத்திய அரசு அனுமதி கொடுத்ததும், அதனை நீதிமன்றம் தடையை நீக்கியதும் தமிழக மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதில், ஒரு போராட்டமாக தற்போது, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது.
நெல்லையில் தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும்.
நதி நீரை பாசனம், குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி நீரை வழங்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் போன்ற கோரிகைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது.
ஆற்றில் இறங்கிய விவசாயிகள் தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.