புதுடெல்லியில் நடந்தது விவசாயிகள் போராட்டம் இல்லை - தமிழிசையின் கருத்து…

 
Published : Apr 28, 2017, 09:59 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
புதுடெல்லியில் நடந்தது விவசாயிகள் போராட்டம் இல்லை - தமிழிசையின் கருத்து…

சுருக்கம்

Farmers Fight Against New Delhi - Opinion of Tamilisai

தேனி

புதுடெல்லியில் நடந்தது விவசாயிகள் போராட்டம் என சொல்ல முடியாது என பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பெண்களை தரக்குறைவாகப் பேசிய விவகாரத்தில் கேரள அமைச்சருக்கு எதிராக பெண்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க நேற்று மூணாறு செல்லும் வழியில் போடியில் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது:

"தமிழகப் பெண்களை இழிவுபடுத்திப் பேசிய கேரள அமைச்சர் மன்னிப்பு கேட்க மறுத்து வருகிறார். அவரை பதவி நீக்கம் செய்ய கேரள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுடெல்லியில் விவசாயிகள் எனக் கூறிக்கொண்டு சிலர் போராடினர். பிரதமர் நரேந்திர மோதியின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அதை விவசாயிகள் போராட்டம் என சொல்ல முடியாது” என்று பேசினார்.

 

PREV
click me!

Recommended Stories

பிச்சைக்காரனா நீ.?? உயிர் நாடியில் எட்டி உதைத்தார் சவுக்கு சங்கர்! புகார் கொடுத்த தயாரிப்பாளர் பகீர் விளக்கம்
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!