
விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ....ரூ.2247 கோடி ஒதுக்கீடு செய்தார் முதல்வர்.....!
விவசாயிகள் :
புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , நேற்று பல முக்கிய சலுகைகளை அறிவித்தார் . அதனை தொடர்ந்து இன்று விவசாயிகளுக்கு நிவாரண தொகையை அறிவித்தார் முதல்வர். அதன்படி,
இடுபொருள் நிவாரணத் தொகை
விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ரூ.2247 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பாசன பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5.465 வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி கணக்கில் செலுத்தபடும்
விவசாயிகளின் வங்கி கணக்கில், நேரடியாக நிவாரண தொகை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 32 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நிவாரணம் நேரடியாக செலுத்தப்படும் எனவும், முதல்வர் தெரவித்தார்.