எடப்பாடி அடுத்த அதிரடி…விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் வறட்சி நிவாரண நிதி அறிவிப்பு..

 
Published : Feb 21, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
எடப்பாடி அடுத்த அதிரடி…விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் வறட்சி நிவாரண நிதி அறிவிப்பு..

சுருக்கம்

எடப்பாடி அடுத்த அதிரடி…விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் வறட்சி நிவாரண நிதி அறிவிப்பு..

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சிவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

எடப்பாடி முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டவுடன் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 500 மதுக் கடைகளை மூடுதல், பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்குதல், கர்பிணி பெண்களுக்கு கூடுதல் உதவித் தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத் தொகை குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி இன்று வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோது, தமிழகம் முழுவதும் நிலவிய கடும் வறட்சி குறித்து ஆய்வு மேற்கெள்ளப்பட்டது. அதில் விவசாயிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அறிக்கை அனுப்பப்பட்டது.

இதனிடையே இன்று வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் நிவாரண உதவிகள் வழங்க எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 13305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பாதிப்பின் தன்மைக்கேற்ப நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி32  லட்சத்து 30 ஆயிரத்து 191 விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும் ..நீண்ட கால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7287 ரூபாயும், நெற்பயிர்களுக்கு 5465 ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு 3000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுப் புழு வளர்ப்புக்கு  நிவாரணமாக 2428 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை வழங்கப்படவுள்ளது.

இதில் 15 லட்சம் விவசாயிகள் காப்பீடு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சுழன்று அடிக்கப்போகும் சூறாவளிக்காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.! மழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?