
நாகையில் தண்ணீரின்றி பயிர்கள் கருகி இருப்பதைக் கண்ட விவசாயி விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்டார்.
நாகை மாவட்டம் பரங்கிநல்லூரில் வயல்வெளிகளுக்கு பாய்ச்ச நீரில்லாத சூழ்நிலை நிலவுகிறது. அதிகமாக செலவு செய்து, குறைந்த விலையை மற்றும் தனக்கு எடுத்துக் கொண்டு ஊருக்கேச் சோறு போடுவது விவசாயிகள் மட்டும் தான்.
பட்டினத்தார் கூட வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிதான் போனான். ஆனால், இங்கு வாடின பயிரைக் கண்ட விவசாயி மாண்டே போனான்.
ஆண்டுதோறும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை.
சோறு போடும் விவசாயிகளை கூறு போட்டு கொல்லும் ஒரே நம் நாடு மட்டும் தான்.
இந்தியாவின் முதுகெலும்பு என்று மார்தட்டிக் கொண்டு விவசாயிகளின் முதுகில் குத்துவதை புரட்சி என்று காலம் காலமாக கூவிக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.
மற்ற நாடுகளில் பிளாஸ்டிக் அரிசி என்று கலப்படத்தை மக்களிடையே புகுத்துகின்ற பணியில் இறங்கி இருக்கின்றன. ஆனால், நாம் உண்பதற்காக ஒவ்வொரு நெல் மணியையும் பார்த்து பார்த்து வளர்க்கும் விவசாயிகளை நாம் பார்ப்பதே இல்லை.
நஞ்சை உண்டு, புஞ்சை உண்டு பஞ்சம் மட்டும் இங்கு மாறவே இல்லை.