
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த சிவம் பட்டியில் சரவணா மெடிக்கல் மற்றும் கிளினிக் நடத்தி வந்த, ஊத்தங்கரை அடுத்த குண்ணத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் (34) என்பவர் தான் மருத்துவர் என்று கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
இது பற்றிய புகாரின் பேரில் அறிந்த ஊத்தங்கரை தலைமை மருத்துவர் மாரிமுத்து. மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆப்தாப்பேகம் , போச்சம்பள்ளி மண்டல துணை வட்டாட்சியர் மகேஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சரவணன் பல ஆண்டுகளாக போலி மருத்துவராக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சரவணனை மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் கைது செய்து வழக்குப் பதிவு செய்தார்.
இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் துணை இயக்குனர் சரவணன் தலைமையில் சரவணன் வேப்பனஹள்ளி மருத்துவர் குழு போலி மருத்துவர்களை பிடிக்க சோதனை நடைபெற்றது , இதுவரையிலும் 5 பேரை கைது செய்தனர் மருத்துவமனைகளும் சீல் வைக்கப்பட்டது