ஹெல்மெட் போட்டாலும் இதை செய்யுங்க.. இல்லைனா அபராதம் தான் மக்களே.. உஷார்.!!

By Raghupati RFirst Published Sep 10, 2022, 11:32 PM IST
Highlights

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததாலும், கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக செயல்படுத்தாததாலும் விபத்துகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் 2007 ஆம் ஆண்டு கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், அணியாதவர்களது லைசென்ஸ் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஆனால், எப்படியும் சிலர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததாலும், கட்டாய ஹெல்மெட் உத்தரவை முறையாக செயல்படுத்தாததாலும் விபத்துகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஹெல்மெட்டில் உள்ள ஸ்டிராப்பை முறையாக அணிந்திருக்க வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு..பிரிட்டன் மன்னரானார் சார்லஸ்.. உணர்ச்சிவசப்பட்டு சோகத்தில் பேசிய சார்லஸ்.. என்ன பேசினார் ?

அப்படி, ஒருவேளை ஸ்டிராப் போடாவிட்டால் அந்த பயணி ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிவதும் குற்றச் செயலாகும். கண்களை மறைக்கும் வகையில் கண்ணாடி இருக்க வேண்டும். பி.ஐ.எஸ் சான்றிதழும் அவசியம் ஆகும். மேலும், வாகனத்தில் செல்லும் குழந்தைகளும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்.

அவர்களுக்கான பாதுகாப்பு பெல்ட் பயன்படுத்தப்படுவது அவசியம் ஆகும். குழந்தைகளுடன் செல்லும் இரு சக்கர வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் தான் பயணிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் பட்சத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். 

மேலும் செய்திகளுக்கு..“அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு”.. அண்ணாமலை போட்ட மாஸ்டர் பிளான் - பதவி தப்புமா ?

வாகனங்களில் மிக அதிகமான பாரம் ஏற்றிச் சென்றால் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக வாகன ஓட்டுநர் கூடுதலாக ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். வாகன ஓட்டிகள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே அரசின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மொபைல் போன் வெடித்து பலியான பெண்.. இந்தியாவில் இதுதான் முதல் முறை - அதிர்ச்சி சம்பவம்!

click me!