தமிழக கிராமங்களில் இனி வைபை ஹாட் ஸ்பாட் வசதி… உருவாகிறது அம்மா இ-கிராமம்….

 
Published : Jul 15, 2017, 06:03 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
தமிழக கிராமங்களில் இனி வைபை ஹாட் ஸ்பாட் வசதி… உருவாகிறது அம்மா இ-கிராமம்….

சுருக்கம்

every district in tamilnadu wil be opened wifi hotspot

தமிழகத்தில் மாவட்டம் தோறும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட "அம்மா இ-கிராமம்" உருவாக்கப்படும் என்றும் , அந்த கிராமங்களில்  WiFi Hotspot,  Smart Street Lighting ,  Tele Education , Tele Medicine போன்ற தரமான சேவைகள் வழங்கப்படும் என்றும் தமிழக சட்டப் பேரவையில்  முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விதி எண் 110 –ன் கீழ் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் வெளியிட்டார்.

அதன்படி  தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ‚அம்மா இ-கிராமம் என ஒரு கிராமம் தெரிவு செய்யப்பட்டு, அந்த கிராமத்திற்கு, தகவல் தொழில் நுட்பவியல் வசதியினை கொண்ட WiFi Hotspot,  Smart Street Lighting ,  Tele Education , Tele Medicine போன்ற தரமான சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்..

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனங்களின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியிலிருந்தும் மற்றும் அந்தந்தத் துறைகளின் திட்ட ஒதுக்கீட்டிலிருந்தும், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஊராட்சி அளவில் இது வரை கிடைக்கப் பெறாத நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை கிராமங்களுக்குக் கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் அறிவித்தார்.

மின்வகுப்பறைகள் மூலம் பிற இடங்களில் நடத்தப்படும் சிறப்பான பாடத் திட்டங்களை காணொலிக்காட்சி மூலமும், இணையவழி மூலமும் கிராமப் பள்ளிகளை சென்றடைய இத்திட்டம் வழிவகுக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பெரிய நகரங்களில் உள்ள சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளை கிராமத்தில் இருந்து கொண்டே தொலைமருத்துவம் மூலம் பெற்றுக் கொள்றும் வசதி இந்த அம்மா இ-கிராமங்கள் மூலம் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பா பழனிசாமி தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!