கடைசி நிதிநிலை அறிக்கையில் கூட பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை - போட்டுத் தாக்கும் இரயில்வே யூனியன்...

 
Published : Feb 02, 2018, 11:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
கடைசி நிதிநிலை அறிக்கையில் கூட பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை - போட்டுத் தாக்கும் இரயில்வே யூனியன்...

சுருக்கம்

Even in the last financial statement the BJP did not fulfill its promise - the railway union...

திருவாரூர்

பாஜகவின் வாக்குறுதியான தனிநபர் வருமானவரி உச்ச வரம்பு ரூ. 5 இலட்சமாக உயர்த்தப்படும் என்பதை கடைசி நிதிநிலை அறிக்கையில் கூட நிறைவேற்றவில்லை என்று தட்சிண இரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கருத்து தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில், தட்சிண இரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலர் மனோகரன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "நாள்தோறும் 25 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் இரயில் நிலையங்களில் தானியங்கி ஏணிப்படி பொருத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 8 ஆயிரத்து 613 இரயில் நிலையங்கள் உள்ளன. அதில், 2 ஆயிரத்து 153 ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்ட சிறு நிலையங்கள். ஏ,பி மற்றும் சி தரத்தில் உள்ள 2 ஆயிரம் நிலையங்களுக்கு எஸ்கலேட்டர் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது.

தானியங்கி ஏணிப்படி திட்டங்கள் நிறைவேற்ற குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும். திட்டம் உடனடியாக நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை.

இதுவரை 392 இரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நிதியின்கீழ் 102 நிலையங்களிலும், நிர்பயா நிதியின்கீழ் 983 நிலையங்களிலும் இத்திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள 7 ஆயிரத்து 136 இரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகள் பாதுகாப்புக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆகும். இது வரவேற்கத்தக்கது.

இரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1.48 இலட்சம் கோடி இலக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு வளர்ச்சி திட்டங்களுக்கு பட்ஜெட் ஆதரவு நிதி ரூ. 55 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டு ரூ. 40 ஆயிரம் கோடி மட்டுமே அரசு ஒதுக்கியது.

பொது தனியார் பங்களிப்பு நிதி திட்டமிட்டபடி இரயில்வே திட்டங்களுக்கு கிடைக்கவில்லை. ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் இருந்து இரயில்வே திட்டங்களுக்கு எதிர்பார்த்த ரூ. 1.50 இலட்சம் கோடி நிதியில் நான்கில் ஒருபங்கு நிதியே இதுவரை கிடைத்திருக்கிறது. வளர்ச்சி திட்ட இலக்கு சாத்தியம் இல்லை.

பாஜக அரசு அளித்த வாக்குறுதியான தனிநபர் வருமானவரி உச்ச வரம்பு ரூ. 5 இலட்சமாக உயர்த்தப்படும் என்பது நிறைவேற்றவில்லை. இதுவே, இந்த அரசின் முழுமையான இறுதி நிதிநிலை அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இரயில்வே ஊழியர்களுக்கான நலத் திட்ட அறிவிப்புகளோ, 2.25 இலட்சம் காலிப் பணியிடங்கள் இரயில்வேயில் நிரப்புவது குறித்தோ, மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய நிர்ணயக் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்தோ மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

எனவே, மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது" என்று அவர் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

ஒரு பாண்டிச்சேரிக்காரர் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார்.! விஜய் முன்னாள் மேனேஜர் கடும் குற்றச்சாட்டு
சுடச்சுட ரெடியாகும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்! கனிமொழி தலைமையில் தயாராக போகும் தேர்தல் நாயகன்!