லாக் அப் மரண திரைப்படங்களை பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஸ்டாலின்- இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Apr 21, 2024, 12:30 PM IST

காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


விசாரணைக்கைதி மரணம்

தமிழகத்தி் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் கைதிகள் போலீசாரின் தாக்குதலில் உயிரிழப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில்ல திருவள்ளூர் மாவட்டத்தில் விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Tap to resize

Latest Videos

 திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இனியும் 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதலா.? தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கிடுக- சீறும் ராமதாஸ்

நீலிக்கண்ணீர் வடிக்கும் ஸ்டாலின்

விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு இந்த விடியா அரசின் முதல்வரையும் வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Premalatha: நாம் யாருக்கு ஓட்டுப் போட்டா என்னா... என்ன மாற்றம் வரப்போகிறது என்ற மனநிலையில் மக்கள் - பிரேமலதா
 

click me!