இந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுவோமா நாங்கள்.! ஸ்டாலினை எச்சரிக்கும் எடப்பாடி

Published : May 05, 2025, 11:52 AM IST
இந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுவோமா நாங்கள்.! ஸ்டாலினை எச்சரிக்கும் எடப்பாடி

சுருக்கம்

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதால் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுகவிற்கு எதிராக களம் இறங்கிய அதிமுக :  தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அதிமுக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று அரக்கோணம் அருகே உள்ள இச்சிப்புத்தூரில் எம்ஆர்எப் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தற்காலிக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட இன்று காலை வந்தனர்.  போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதாக அதிமுகவினரிடம் போலீசார் தெரிவித்தனர்.இருந்த போதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் முன்னாள் எம்,பி, எம்எல்ஏ உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தொழிலாளர்களுக்கு ஆதரவாக அதிமுக

இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான  சு. இரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன்,  கழக அமைப்புச் செயலாளரும், 

அதிமுகவினர் கைதுக்கு எடப்பாடி கண்டனம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ. அரி உள்ளிட்ட கழக நிர்வாகிகளை விடியா திமுக மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கழகத்தினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்? பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!