
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அதிகாரிகள் வீடுகளில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 20 இடங்களில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF)யில் சலுகை கொடுப்பதாக கூறி, வைப்பு நிதி அதிகாரிகள் மோசடியில் ஈடுபடுவதாக, சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சிபிஐ அதிகாரிகள், சென்னையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அதிகாரிகள் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 20 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தி ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகையில் சலுகை காட்டி ஆதாயம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.