குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து என்ஜினியரிங் மாணவி பலாத்காரம்...! வீடியோ எடுத்து மிரட்டியே பலமுறை சீரழிக்கப்பட்ட அவலம்...!

 
Published : May 09, 2018, 04:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து என்ஜினியரிங் மாணவி பலாத்காரம்...! வீடியோ எடுத்து மிரட்டியே பலமுறை சீரழிக்கப்பட்ட அவலம்...!

சுருக்கம்

engineering collage girl sexyally harresed

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பொண்ணாத்தூர் அருகே உள்ள நீலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். மின்வாரியத்தில் இளமின் பொறியாளராக உள்ளார். இவருடைய மகன் தமிழ்செல்வன் திருவண்ணாமலையில் உள்ள தனியார் சூரிய மின்சக்தி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் தன்னுடன் என்ஜினியரிங் படித்த, அதே கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். தற்போது அந்த மாணவி எம்.டெக் படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியின் வீட்டுக்கே சென்றுள்ளார் தமிழ்செல்வன். அப்போது அந்த மாணவிக்கே தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் இதை அவர் தன்னுடைய கைபேசியிலும் வீடியோவாக எடுத்ததாக தெரிகிறது. அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி பலமுறை அந்த மாணவியுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே அந்த மாணவியின் பெற்றோர் வேறொரு இடத்தல் திருமணதிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதையறிந்த தமிழ்செல்வன் இந்த மாணவியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

மேலும் தன்னுடைய தந்தை சங்கருடன், மாணவியின் வீட்டிற்கே சென்று தனக்கு பெண் கொடுக்க வேண்டும் என கூறியும், கொடுக்காவிட்டால். மாணவி மீது, ஆசிட் ஊற்றி விடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு தமிழ்செல்வனின் தந்தையும் உடந்தை என கூறப்படுகிறது. 

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் போரில் தமிழ்செல்வனை போலீசார் கைது செய்து அவருடைய தந்தை சங்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!