
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள கேஆர்பி அணையின் முதலாவது ஷட்டரில் நேற்று முன் தினம் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அணையில் இருந்து முதலாவது மதகின் மூலமாக கட்டற்ற வகையில் தண்ணீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில், மதகு உடைப்பு ஏற்பட்டது தொடர்பாக கேஆர்பி அணையின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியனை சஸ்பெண்ட் செய்து, தலைமை செயற்பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். இதில், செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் இன்றுதான் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் ஓய்வு பெற உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, கேஆர்பி அணையில் முதலாவது மதகு திடீரென முழுதுமாக உடைந்தது. இதற்கு பராமரிப்புப் பணியில் இருந்த குறைபாடுதான் காரணம் என்று கூறப் படுகிறது. இருப்பினும் அணையில் ஏற்பட்டிருந்த அழுத்தம் காரணமாக முதலாவது மதகு உடைப்பு எடுத்ததாம். ஆனால், அதனை உடனடியாக சரி செய்ய இயலவில்லை. நீரின் அழுத்தத்தைக் குறைக்க அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேற்றப் பட்டது.