
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக இளைஞர்களின் வீர விளையாட்டாகவும், தமிழர் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் தொன்று தொட்டு திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு மீண்டும் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம் “ஜல்லிக்கட்டு ஒரு நிகழ்ச்சி தான். மதம் தொடர்பானது அல்ல” என்று கூறி இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்திருக்கும் செய்தியைப் படிக்கும் போது, ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர் கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஆணித்தரமாக எடுத்துக் கூற அ.தி.மு.க. அரசு தவறிவிட்டது என்பதைத் தான் இது வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உரிய சட்டத்தை இந்த குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
வருகின்ற பொங்கலன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அ.தி.மு.க. அரசும், பா.ஜ.க. மத்திய அமைச்சர்களும் இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்து, தமிழர்களின் எண்ணம் ஈடேற உறுதியான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.