திருநெல்வேலியில் கனமழை - குற்றால அருவிகளில் வெள்ளம்

 
Published : Nov 17, 2016, 06:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
திருநெல்வேலியில் கனமழை - குற்றால அருவிகளில் வெள்ளம்

சுருக்கம்

நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதையொட்டி குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக குற்றாலத்தில் பெய்த மழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மாலை 6.30 மணிக்கு பிறகு பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று கார்த்திகை மாதம் பிறந்த நிலையில் சபரிமலைக்கு மாலை அணிந்து வரும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்துக்கு வந்துசெல்வது வழக்கம். இந்த சமையத்தில் பலத்த மழை பெய்து, அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், ஐயப்ப பக்தர்கள், குளிக்க முடியாத நிலையில் தடை நீடித்தது.

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!