
குட்டியைக் காணாமல் பதற்றமடைந்த காட்டு யானை !! பாதசாரிகளை ஓட,ஓட விரட்டியதால் பரபரப்பு !!!
மேட்டுப்பாளையம் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன யானைக்ககுட்டி ஒன்று வாய்க்காலுக்குள் தவறி விழுந்துவிட்டதை அறியாத தாய் யானை சாலையில் செல்பவர்களை எல்லாம் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியயுள்ளது.
மேட்டுப்பாளையம் வனச்சரகம், சுண்டப்பட்டி பிரிவு, வனபத்திரகாளியம்மன் கோவிலை அடுத்து உள்ள தேக்கம்பட்டி சாலையோரம், பம்ப் ஹவுஸ் அருகில் ஒரு பெண் யானை சாலையில் செல்பவர்களை ஓட,ஓட விரட்டியது.
இதில் . ஒரு ரோட்டாவேட்டர் மற்றும் ஒரு மொபட் மட்டும் லேசாக உடைபட்டது. இதையடுத்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அருகிலுள்ள கிராம விவசாய நண்பர்கள் மற்றும் வன ஆர்வலர்ளுடன் இணைந்து அந்த யானையை அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
ஆனாலும் அந்த யானை மீண்டும், மீண்டும் சாலைப்பகுதிக்கே வந்ததால், சந்தேகமடைந்த வனத்துறையினர் அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடியதில் அந்த யானையின் ஒரு மாதம் மதிக்கத்தக்க யானைக்குட்டி பழைய வாய்க்காலுக்குள் விழுந்து கிடந்தது.அதை கவனிக்காத யானை சாலையில் செல்பவர்களை துரத்துவது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக குட்டியை மீட்ட வனத்துறையினர், அதற்கு இளநீர் தண்ணீர், குளுக்கோஸ் கொடுத்து, நெல்லிமலை வனப்பகுதிக்குள் சுமார் 200 மீ. உள்ளே சென்று விடுவித்துள்ளனர்.
மேலும் வனத்துறையினர் தாய் யானையுன் வருகையை எதிர்பார்த்து காட்டுப்பகுதிக்குளளேயே காத்திருக்கின்றனர்.