என்றைக்கும் நீங்கதான் சூப்பர் ஸ்டார் தலைவா!! ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லி தெறிக்கவிட்ட சேவாக் !!!

 
Published : Dec 13, 2017, 08:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
என்றைக்கும் நீங்கதான் சூப்பர் ஸ்டார் தலைவா!! ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லி தெறிக்கவிட்ட சேவாக் !!!

சுருக்கம்

cricketter sewag congrats rajini in his twitter

நடிகர் ரஜினிகாந்த்தின் 68 ஆவது பிறந்தநாளையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், நீங்கதான் எப்பவும் சூப்பர் ஸ்டார் தலைவா என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் அன்னதானம் செய்தும், உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் பிரமாண்டமான பேனர்கள் வைத்தும், வால் போஸ்டர்களை ஒட்டியும் அசத்தினர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான  காமராஜர், அண்ணா ஆகியோரின் போட்டோக்களுடன் ரஜினியை ஒப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் 3வது கருப்பு தமிழன் ஆளட்டும் என்று அந்த வால் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போல் நாளைய முதல்வரே!, ஈகை மனம் கொண்ட ஈரத்ழமிழனே!, அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வெற்றிலைபாக்கு வைத்து அழைக்கிறோம். வா... தலைவா.... வா என்றும், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததது.

மாண்புமிகு ரஜினிகாந்த் தலைமையிலான  அமைச்சரவை பதவி ஏற்கும் விழா  என்றும் ,ஆளப்பிறந்தவரே’,மக்கள் போற்றும் மாமனிதரே, மக்களின் உயிரே, ரஜினி காந்த் எனும் நான்... என்று தொடங்கும் வாசகங்களும் இடம் பெற்ற போஸ்டர்கள் ஒட்டபட்டிருந்தன.

இந்நிலையில் ரஜினிக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொலைபேசி மூலமும், சமூக வலைதளங்கள் மூலமும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், என்றைக்குமே நீங்கதான் சூப்பர் ஸ்டார் தலைவா என்று தமிழில் வாழ்த்துத் தெரிவித்து ரஜினி ரசிகர்களை பரவசப்படுத்தியிருக்கிறார்.

 

 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!