
கிருஷ்ணகிரியில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விளைநில பயிர்களை சேதம் விளைவிப்பதால் அவற்றை வனப்பகுதிக்குள் துரத்திவிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி கிராமம் தமிழக, ஆந்திரா, கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் விளைவித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன் வேப்பன்னஹள்ளி பகுதியில் காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளன. பகல் நேரத்தில் காட்டுக்குள்ளும் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள ராகி, தக்காளி பயிர்களை சாப்பிடுவதுடன் கால்களால் மிதித்து சேதப்படுத்தி சென்று விடுகின்றன.
விவசாய பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் யானைகள் காட்டுக்குள் விரடப்படும் வரை பொதுமக்கள் ஆடு மாடுகளை மேய்க்க வேண்டாம் என்றும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.