உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா…! சடலத்துக்கு OP சீட்டு கொடுத்த அரசு மருத்துவமனை ஊழியர்!!

By vinoth kumar  |  First Published Dec 17, 2018, 3:27 PM IST

சடலம் கொண்டு வந்திருப்பதாக கூறியபிறகும், ஓபி சீட்டு வாங்க வேண்டும் என கூறி பெயர் விபரங்களை கேட்டு மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியர் குறிப்பேட்டில் எழுதி கொண்டார். பின்னர், அடுத்த முறை வரும்போது, அந்த சீட்டை கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தினார். அவரது கடமை உணர்ச்சியை பார்த்த பொதுமக்கள் கடும் கொந்தளிப்படைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு மேற்கு பகுதியில் கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு 30 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை மின் இணைப்பு வழங்கப்பட்டது. மின் இணைப்பு வழங்கப்படட்ட தகவல் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை. இதே கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (35). அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் விஜயா இன்று காலை வழக்கம்போல் தனது டீக்கடைக்கு சென்றார். அப்போது, அங்குள்ள சுவிட்டை போட்டு, மிக்சியை பயன்படுத்த கையில் எடுத்தார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். 

Tap to resize

Latest Videos

இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக  அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு  தனியார் ஆம்புலன்சில் அனுப்பினர். அறந்தாங்கி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்ற சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும் என ஆம்புலன்ஸ் ஊழியர் கூறியுள்ளார்.

அப்போது அங்கு மருத்துவமனை பணியில் இருந்த ஊழியர், ஒபி சீட்டு வாங்க வேண்டும் என  கூறி, விபரங்களை கேட்டுள்ளார். அவரிடம் பலமுறை கொண்டு வந்தது சடலம் என கூறியும் ஒபி சீட்டை கொடுத்துள்ளார். மேலும், அந்த சீட்டில் மறுமுறை வரும் போது தவறாமல் இந்த சீட்டை கொண்டுவரவும் என குறிப்பும் எழுதப்பட்டிருந்தது. 

மின்சாரம் தாக்கி இறந்தவருக்கு ஒபி சீட்டு கொடுத்து, மீண்டும் கொண்டு வரும்படி கூறிய மருத்துவமனை ஊழியரின் கடமை உணர்ச்சியை பார்த்து பொதுமக்கள் கடும் கொந்தளிப்படைந்துள்ளனர்.

click me!