
சென்னையில் முதன் முறையாக,மின்சார பேருந்து திட்டத்திற்கு சி40 நிறுவனத்துடன் தமிழகஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நாட்டில் நிலவி வரும் சுற்று சூழல் மாசுப்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாக தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் மின்சார பேருந்து திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த திட்டத்திற்கு தமிழக முதலவர் எடப்பாடி கையெழுத்திட்டார்.உடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
இங்கிலாந்தில் சி 40 என்ற நிறுவனம் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் மின்சார பேருந்தை அறிமுகம் செய்து வருகிறது.
உலக அளவில் 26 நாடுகள்
உலக அளவில் இதுவரை 26 நாடுகளின் ஆதரவு பெற்று, கடந்த 2015 ஆண்டு மார்ச் மாதத்தில் அர்ஜென்டினா நாட்டின் பியூனோஸ் ஏரெசில் நடைபெற்ற சி40 லத்தீன் அமெரிக்க மேயர்ஸ் மன்றத்தில் முதம் முதலாக அறிக்கை செய்து கையொப்பம் இட்டுக்கொண்டன.
இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் தங்களுடைய மின்சார சேவையை நடைமுறை படுத்துவதற்காக சாலை வரைபடம், தேவையான உள்கட்டமைப்பு, சீரான மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக கிடைக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கையும் c 40 நிறுவனம் தமிழகத்திற்கு உதவி செய்யும் என தெரிவித்து உள்ளார்.