
புதுக்கோட்டை
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி பின் வியாபாரக் குழு தேர்தலை நடத்த வேண்டும் என்று பொன்னமராவதியில் புதுக்கோட்டை மாவட்ட சாலையோர வணிகர்கள், விற்னையாளர்கள் சங்கப் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட சாலையோர வணிகர்கள், விற்னையாளர்கள் சங்கப் பொதுக்கூட்டம் புதுகோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சிஐடியு கிளைத் தலைவர் விஆர்எம். சாத்தையா தலைமை தாங்கினார். கிளைச் செயலர் அ.தீன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் ஆர்.தெய்வராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் க.முகமதலிஜின்னா, மாவட்ட துணைத் தலைவர் எம். ஜியாவுதீன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.
இக்கூட்டத்தில், “சாலையோர வியாபாரிகள் தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே முறைப்படுத்தி வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி பின் வியாபாரக் குழு தேர்தலை நடத்த வேண்டும்.
சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும்,
கந்து வட்டி கொடுமையைத் தடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், நிர்வாகிகள் அ.பழனிச்சாமி, எஸ்.சௌந்தரம், எம்.ஐயாவு, அ.நல்லு, எல்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் கிளைப் பொருளர் எஸ்.கண்ணன் நன்றித் தெரிவித்தார்.