தமிழகத்தில் SIR.! திமுக, அதிமுக, பாஜகவிற்கு அழைப்பு - தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை

Published : Oct 29, 2025, 07:30 AM IST
Tamil Nadu voter list correction

சுருக்கம்

Election Commission : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க, தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில்  12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. 

Election Commission all party meeting : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. எனவே இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR எனப்படுகிற வாக்காளர் பட்டியல் திருத்த பணியானது நடைபெறவுள்ளது. ஏற்கனவே பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வந்தது. அந்த வகையில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதனை தேர்தல் ஆணையம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்

இந்த நிலையில் தான் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான படிவங்களை அச்சிடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி மாநில அளவிலான அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற உள்ளது.

12 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அங்கீகரிப்பட்ட தேசிய கட்சிகளான பாஜக. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 கட்சிகளுக்கும், அங்கீகரிப்பட்ட மாநில கட்சிகளான திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, நாம் தமிழர் கட்சி,  உள்ளிட்ட 6 கட்சிகள் என மொத்தம் 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பல்வேறு சந்தேங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இது போன்று மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையிலும் அப்பகுதியை சேர்ந்த  அனைத்து கட்சி கூட்டம் வரும் நாட்கள் நடத்தப்பட உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?