"நாட்டை வளமாக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்" - முதல்வர் சுதந்திர தின வாழ்த்து!!

 
Published : Aug 14, 2017, 11:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
"நாட்டை வளமாக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்" - முதல்வர் சுதந்திர தின வாழ்த்து!!

சுருக்கம்

edappadi palanisamy independence day wishes

சாதி, மத வேறுபாடு களைந்து நாட்டை வளமிக்கதாக உருவாக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற்று 71-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. நாளை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். சுதந்திர தினவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். சுதந்திர தின கொண்டாட்டத்தை அடுத்து, சென்னை முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரவித்துள்ளார். அதில், சாதி, மத வேறுபாடு களைந்து நாட்டை வளமிக்கதாக உருவாக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்திய நாட்டின் தனிச்சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமை காணும் உணர்வை காக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!