
அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இந்தக் கூட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
காலை, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி கிழக்கு, தேனி மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதேபோல், இன்று மாலை ராணிப்பேட்டை கிழக்கு, ராணிப்பேட்டை மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை கிழக்கு, திருவண்ணாமலை மத்தியம், கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளையும் விரைந்து ஆற்றுவது குறித்தும் விரிவாக ஆலோசனை வழங்கினார்.