
மருத்துவமனையில் தாக்குதல்
மருத்துவமனையில் போதை நபரால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவரின் அட்டகாசத்தால் மருத்துவப் பணியாளர்களும் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளானதாக வரும் செய்தி கவலையளிக்கின்றது.
குற்றச்செயல் அதிகரிப்பு
போதைபொருள் புழக்கம் குறித்த எனது தொடர் எச்சரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் இந்த விடியா திமுக அரசு செயலற்று இருந்ததன் விளைவே, தற்போது தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டால் அதிகரிக்கும் குற்றச் செயல்களும் பொதுமக்களுக்கான இடையூறுகளும்.கடந்த சில நாட்களாக போதைப்பொருட்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த செய்திகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்துமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.