தமிழகத்தில் ஆட்சி கவிழாது ..! அதிரடி காட்டும் குருமூர்த்தி..!

First Published May 9, 2018, 5:54 PM IST
Highlights
edapadi govt will not dissolve in tamilnadu now


சென்னையில் இன்று அடித்தார் குருமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை  பகிர்ந்து வருகிறார்.

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து பதில் அளித்து வருகிறார்.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியது...

தமிழகத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை

மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே

மோடியை எதிர்ப்பதால் மட்டும் மோடியை தோற்கடிக்க முடியும் என்பது முடியாத ஒன்று ...மோடியை வீழ்த்துவதற்காக மட்டும் இதை செய்தால் அது  நடக்கவே நடக்காது...

காவிரி பற்றி தெரிவிக்கும் போது....

காவிரி வழக்கின் வழக்கின் தீர்ப்பை படிக்காமல் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துகிறார்கள்...முதலில் அதை முழுமையாக படிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

நீட் பற்றி....

நீட் பற்றி முதலில் அரசியல் தலைவர்கள் படிக்க வேண்டும் பின்னர் அதை பற்றி பேசினால் நல்ல இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்...நீட் பற்றி அறையும் குறையுமாக தெரிந்துகொண்டு அதை பற்றி பேசுவது சரியாக படவில்லை என்று தெரிவித்தார்

தமிழ்நாட்டின் தலைமை..

ஒரு கட்சிக்கு ஒரு தலைமை இருக்கலாம்...ஆனால் தமிழ் நாட்டிற்கு ஒரு தலைமை இருக்கிறது என்று மக்கள் நினைக்க வில்லை....

எனவே, ரஜினியும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தில் நல்ல ஆட்சி அமையும்..அதாவது தமிழகத்தில் நிலாவும் அரசியல் வெற்றிடம் நிரப்பப் படும் என தெரிவித்து இருந்தார்...

காரணம்..ரஜினிக்கு மக்கள் ஆதரவு ...மோடிக்கு ஆளுமை  திறன் ...

இவை இரண்டும் ஒன்றாக சேரும் போது, தமிழகத்தில் தாமரை மலர்ந்து, தற்போது நிலவும் வெற்றிடம்  நிரப்பப்படும் எனவும் தெரிவித்து  இருந்தார்

எம்எல்ஏக்கள்

எம்எல்ஏக்கள் யாரும் தற்போது தேர்தலை சந்திக்க தயாராக இல்லை..மேலும், எந்த ஒரு கட்சியும், இந்த ஆட்சி சரி இல்லை என்று சொல்கிறதே தவிர," எங்களுக்கு இவ்வளவு ஆதரவு , இத்தனை எம் எல் ஏக்கள் இருக்கிறார்கள்.. அடுத்த முதல்வர் இவர்தான் என கூறும் அளவிற்கு யாரும் இல்லாத ஒரு வெற்றிடம் இங்கு உள்ளது என கூறினார்

கர்நாடக தேர்தல் பற்றி ...பாஜகவா..? காங்கிரசா?

யார் வெற்றி பெறுவார்கள் என்றால், இரண்டு பேரால் தான்  நிர்ணயிக்க முடியும்....

ஒன்று ஜோதியர்

இன்னொன்று தேர்தல் ரிசல்ட் என்று தெரிவித்து உள்ளார்.மேலும் தான் யாருக்கும்  ஆலோகர் இல்லை என்றும் கூறி உள்ளார்.

click me!