
ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைப்பெறுவதாக இருந்தது. ஆனால் பண பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது .
பின்னர் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தொடர்பாக பணப்பட்டுவாடா நடைப்பெற்றதை தேர்தல ஆணையம் உறுதி செய்ததையடுத்து ஆர்.கே நகர் தேர்தல் ரத்தானது. இதற்கான காரணத்தை 29 பக்க அறிக்கையாக தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்கள் செய்த “டெபாசிட்” தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதன்படி, வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்றும்,பின்னர் டெபாசிட் தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.