
கடந்த வெள்ளிகிழமையன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் , சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் , நடிகருமான சரத்குமார், எம் ஜி ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்ட மூவரின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர் .
இதனை தொடர்ந்து இவர்கள் மூவரும் நேரில் வந்து விளக்கம் தர சம்மன் அனுப்பியது வருமான வரித்துறை.
பின்னர் விஜய பாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமார், நுங்கம்பாக்கத்தில் உள்ள , வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விளக்கம் அளித்தனர் . ஆனால் துணை வேந்தர் கீதா லட்சுமி நேரில் ஆஜராகாமல், இதற்கு எதிராக நேரில் ஆஜராகுவதற்கு விலக்கு அளிக்கும் படி மனு அளித்தார் .
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது. விசாரணையின் முடிவில், வருமானவரித்துறை சார்பில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனை எதிர்த்து தொடரப் பட்ட இந்த மனு அதிரடியாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
எனவே, துணை வேந்தர் கீதா லட்சுமி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்பது உறுதியாகி விட்டது .