
மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியாக, ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு அவர்கள் செலுத்தும் கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுர்வோர் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையிலும் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மேலும் மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.