மிதக்கும் சேலம்..! வீட்டிற்குள் புகுந்த ஏரிநீர்..! துர்நாற்றத்துடன் மக்கள் பெரும் அவதி...!

 
Published : Jul 02, 2018, 04:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:36 AM IST
மிதக்கும் சேலம்..! வீட்டிற்குள் புகுந்த ஏரிநீர்..! துர்நாற்றத்துடன் மக்கள் பெரும் அவதி...!

சுருக்கம்

selam people suffers a lot due to water stagnation in selam house

சேலத்தில் நேற்று இரவு முழுக்க தொடர்ந்து பெய்த மழையினால்,சேலம் சீலாவரி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.

இவ்வாறு வெளியேறும் நீர், சலவை  நீர், சாக்கடை நீருடன் கலந்து மக்கள் குடி இருக்கும் பகுதி முழுக்க சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள்  பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்த கழிவு நீர் வீடுகளினினுள் நுழைந்ததால், துர்நாற்றம் வீசுவதுடன் இதன் காரணமாக தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மக்கள்  அஞ்சுகின்றனர்

பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மக்களின் நிலையை புரித்துக்கொண்டு மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து  உள்ளனர்.

மேலும் எரி இதுவரை தூர்வாரபடாமல் இருப்பதால் தான் இந்த பிரச்சனை எழுந்துள்ளது என்றும், இதற்கு முன்னதாக இந்த ஏரியில் கழிவுகள் மட்டுமே குட்டை போல் தேங்கி இருந்ததாகவும் அந்த தண்ணீர் தான் தற்போது மழை வெள்ளத்துடன் பெருக்கெடுத்து ஆறு போல் மக்கள் குடியிருப்பு பகுதிக்கும் நுழைந்து விட்டது என  மக்கள்  குற்றம் சாட்டி வருகின்றனர்

சென்னை முதல் சேலம் வரை 8 வழிச்சாலை போட முனையும் அரசு, அதே சேலத்தில் மக்கள் படும் அவதிடையை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ என்ற மக்கள்  கொந்தளிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை