
திருச்சியில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு முறைக்கு எதிராகவும், மாணவர்களின் நலன் காக்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அதிரடியாகக் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.